வங்கிக் கடனுதவி கருத்தரங்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வங்கிக் கடனுதவி கருத்தரங்கு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல், திண்டுக்கல்லில் வங்கிக் கடனுதவி திட்ட கருத்தரங்கு மாவட்ட பொதுமேலாளர் (பொறுப்பு) ஜெயா தலைமையில் நடந்தது. 'டிக்கி' அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ் வரவேற்றார். தேசிய சிறுதொழில் கழக மூத்தகிளை மேலாளர் பிரேம்ஆனந்த், 'அரசு நிறுவனங்களுக்கு 20 சதவீதம் அளவுக்கு சிறுதொழில் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்ய வேண்டும். அதற்கு தேசிய சிறுதொழில்கழகம் உதவும்'' என்றார்.பொதுமேலாளர் ஜெயா, 'அரசு கடன் திட்டங்கள் என்னென்ன உள்ளன. அதனை இளைஞர்கள்எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்பது குறித்து எடுத்துரைத்தார். திண்டுக்கல் கயறு உற்பத்திக் கழக நிர்வாகி மல்கர்சாய்பு, கால்நடை மருத்துவு அறிவியல் பல்கலை மைய தலைவர் பழனிச்சாமி, உதவிபொறியாளர் முகமது மருது, நிதிசார் கல்வி மைய ஆலோசகர் சிவசுப்ரமணியம், ஆர்செட் இயக்குனர் பழனிகுமார், வங்கி ஆலோசகர் மோகன் பேசினர். 'டிக்கி' நிர்வாகி மார்ட்டின் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X