பழநி சிறுவர் பூங்காவில் மின்சார ரயில், ரப்பர் படகு நகராட்சி நிர்வாகம் திட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழநி சிறுவர் பூங்காவில் மின்சார ரயில், ரப்பர் படகு நகராட்சி நிர்வாகம் திட்டம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பழநி, பழநி சிறுவர் பூங்காக்களில் குழந்தைகள் பொழுது போக்கிற்காக மின்சார ரயில், நீச்சல்குளம், ரப்பர் படகுவிடுவதற்கு நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.பழநி நகராட்சி சார்பில், உழவர்சந்தை, ராஜாநகர், சுப்ரமணியபுரம், காளிமுத்துநகர் பகுதிகளில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இவ்விடங்களில் போதிய பராமரிப்பு இல்லாததால் குழந்தைகள் விளையாட முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். இந்நிலையில் சிறுவர் பூங்காவை புதுப்பித்து குழந்தைகள் பொழுது போக்கிற்காக மின்சார ரயில், நீச்சல்குளத்தில் ரப்பர் படகு, காளைமாடு மீது சவாரி (புல்லக் ரைடு) இதில் ஏதேனும் ஒன்றை அமைக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காகபழநி உழவர்சந்தை சிறுவர் பூங்காவில் கமிஷனர் ஜோதிகுமார் ஆய்வு செய்தார். அவர் விளையாட்டு சாதனங்களைதனியார் மூலம் அமைக்க உள்ளதாக கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X