இப்போதைக்கு முடியாது பாலப் பணி...மாற்றுப் பாதை; மாற்றம் தேவை!:இருக்கும் சாலையை மேம்படுத்த கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இப்போதைக்கு முடியாது பாலப் பணி...மாற்றுப் பாதை; மாற்றம் தேவை!:இருக்கும் சாலையை மேம்படுத்த கோரிக்கை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

காரமடை:காரமடையில் நில ஆர்ஜிதம் செய்யாததால், ரயில்வே மேம்பாலப் பணிகள் தொய்வடைந்துள்ளன. அதனால், ரயில் பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள மாற்றுப்பாதையை மேம்படுத்தி, தார் ரோடு போடவேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காரமடையில், கோவை - மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டில், 2015 ஜூனில், 33.74 கோடி ரூபாய் செலவில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் துவங்கின. இப்பாலம், 2016 டிச., மாதத்துக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது.மேம்பாலம், 12 மீ., அகலத்தில், 524 மீ., நீளத்தில், 16 பில்லர்களும், இரு பக்கம் அபர்மென்ட் சுவர்களும் அமையும் படி வடிவமைக்கப்பட்டது.
பாலத்துக்காக, கோவை மெயின் ரோடில் சாய்தள ரோடு அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. ஆனால், காரமடை நகரில் மேட்டுப்பாளையம் ரோட்டில் சாய்தள ரோடு அமைக்க, போதிய இடம் இல்லாததால், பணிகள் முடங்கியுள்ளன. நிலம் கையகப்படுத்தாததால், மூன்று ஆண்டுகள் ஆகியும், மேம்பால கட்டுமானப் பணி முடிவடையாமல் உள்ளது.
மேம்பாலத்தின் இரு புறமும், 4.75 மீட்டருக்கு இடத்தை ஆர்ஜிதம் செய்து, அதில் சர்வீஸ் ரோடு, சாக்கடை, நடைபாதை, மின் கம்பங்கள் ஆகியவை அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஆனால், பாலத்தின் இருபக்கம் சர்வீஸ் ரோடு போட தேவையான நில ஆர்ஜிதம் செய்யாமல்,மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் இதுவரை காலம் கடத்தி வருகின்றனர்.ரயில்வே கேட்டுக்கும் தெற்கு பகுதியில் உள்ள மக்கள் மேம்பாலத்தின் மீது ஏறி வருவதற்கு பதிலாக, ரயில் பாதையின் அடியில் வருவதற்கு வசதியாக ரயில்வே நிர்வாகம் சிமென்ட் பாலம் அமைத்துள்ளது. இதில், இருசக்கரம் மற்றும் கார்கள் தற்போது செல்கின்றன.சிறிய ஆம்புலன்ஸ்கள் இப்பாலத்தின் வழியாக சென்று வருகின்றன.ஆனால், இப்பாலத்துக்கு செல்லும் இரு பக்க வழித்தடமும் சரியான முறையில் அமைக்காததால், சாய்தள மண்பாதையாக உள்ளது. மழை பெய்தால் பாலத்தின் அடியில் 2 அடிக்கு சேருடன் மழைநீர் தேங்கி நிற்கும்.
இந்த தண்ணீர் இயற்கையாக வடியும் வரை, ஒரு மாதம் பாலத்தின் அடியில் எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்படும். இதுமாதிரியான காலங்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்களை ஏற்றிச் செல்லும் அனைத்து ஆம்புலன்ஸ்களும், ஒருவழிப்பாதையான கன்னார்பாளையம் ரோட்டில் சுற்றிச் செல்லும் அவலம் ஏற்படுகிறது.
இந்த ரோடும், மிகவும் சிறியதாக இருப்பதால் அடிக்கடி இரு பஸ்கள், லாரிகள் ஒன்றோடு ஒன்று உராயும் நிலையில் நின்று விடும். இது மாதிரியான நேரத்தில் ஆம்புலன்ஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும்.'காரமடையில் ரயில்வே மேம்பால கட்டுமான பணிகளை கண்காணிக்கும் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம், காரமடை ரயில் பாலத்தின் அடியில் உள்ள சாலைக்கு செல்லும் இரு பக்க மண் பாதையை சீரமைத்து தார் ரோடு போட வேண்டும். மழை காலத்தில் பாலத்தின் அடியில் தண்ணீர் தேங்காத படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை