இலவச தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இலவச தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அன்னுார்:இளைஞர்களுக்கு குறுகிய கால இலவச தொழில் பயிற்சிக்கு, விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மகளிருக்கான இலவச குறுகிய கால தொழிற்திறன் பயிற்சி, குப்பேபாளையம், ஜி.ஆர்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரியில் வரும், 19 முதல் நடக்க உள்ளது.தையல் இயந்திர ஆபரேட்டருக்கு, 34 நாட்கள், சி.என்.சி., இயந்திர ஆபரேட்டர், மேசன் ஆகியவற்றுக்கு, 50 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். 18 முதல், 40 வயது வரை உள்ள இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சி புத்தகங்கள், எழுதுபொருட்கள், ஓவர்கோட் இலவசமாக தரப்படும்.தினசரி போக்குவரத்துக்கு, 100 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும். இன்று (14ம் தேதி) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆர்வமுள்ளவர்கள், கல்லுாரியில் நேரடியாக விண்ணப்பங்களை இலவசமாக பெறலாம். மேலும் விபரங்களுக்கு, 77080 79911.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை