கவுசிகா நதியில் பாதை அமைக்க முயற்சி:வருவாய்துறை அதிரடியால் நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கவுசிகா நதியில் பாதை அமைக்க முயற்சி:வருவாய்துறை அதிரடியால் நிறுத்தம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவில்பாளையம்:கவுசிகா நதி செல்லும் வழியில், தனியார் பாதைஅமைக்கும் முயற்சியை வருவாய் துறையினர் தடுத்து நிறுத்தினர்.கவுசிகா நதி மேற்கு தொடர்ச்சி மலையில், குருடிமலையில் உருவாகி, நரசிம்ம நாயக்கன்பாளையம், இடிகரை, வையம்பாளையம், கோவில்பாளையம் வழியாக சென்று நொய்யலில் கலக்கிறது. பல்வேறுஆக்கிரமிப்புகளால், நதியின் பாதை மட்டும் தான்தற்போது உள்ளது.
இந்நிலையில், கோவை சத்தி சாலையில்கோவில்பாளையத்தில், கவுசிகா நதி செல்லும்பாதையின் மீது அமைந்த பழைய பாலம்இடிக்கப்பட்டு, புதிய பாலம் கட்டும் பணி நடந்துவருகிறது. இதற்கு அருகில் கவுசிகா நதி செல்லும்வழியில் குடியிருப்புக்கு செல்லும் வகையில், பாதைஅமைக்க சிலர் முயற்சித்துள்ளனர். நான்குநாட்களாக, பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி, நதி செல்லும் வழியில் பாதை அமைத்து வந்தனர். இதை பார்த்த சமூக ஆர்வலர் காளிச்சாமி மற்றும் விவசாயிகள் வருவாய்துறைக்கு தகவல்தெரிவித்தனர்.
இதையடுத்து வருவாய்துறையினர்நேற்று பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டவர்களிடம், பணியை நிறுத்தஉத்தரவிட்டனர். அப்பகுதி விவசாயிகள் வருவாய்துறைக்கு நன்றிதெரிவித்தனர்.'கவுசிகா நதி செல்லும் வழியில்ஆக்கிரமிப்பு ஏற்படாமல் தொடர்ந்து கண்காணித்துவருகிறோம்' என, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை