பி.ஏ.பி., திட்டத்திலுள்ள பிரச்னைகளை தீர்க்க...நீர் பங்கீடுக்கு... நிலைக்குழு!வல்லுனர் குழுவிடம் திட்டக்குழு வலியுறுத்தல்| Dinamalar

தமிழ்நாடு

பி.ஏ.பி., திட்டத்திலுள்ள பிரச்னைகளை தீர்க்க...நீர் பங்கீடுக்கு... நிலைக்குழு!வல்லுனர் குழுவிடம் திட்டக்குழு வலியுறுத்தல்

Updated : ஜூலை 14, 2018 | Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

பொள்ளாச்சி,:'பி.ஏ.பி., திட்டத்தில், கேரள மாநிலத்துக்கு தண்ணீர் வழங்குவதிலும், கோவை, திருப்பூர் மாவட்டத்தில் பாசன நீர் வழங்குவதிலும் நிலவும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண, நிலைக்குழு அமைக்க வேண்டும்' என திட்டக்குழு வலியுறுத்தியுள்ளது.
கோவை, திருப்பூர் மாவட்டத்தில், நான்கு லட்சம் ஏக்கர் நிலங்கள், பி.ஏ.பி., திட்டத்தில் பாசன பெறுகின்றன. திருமூர்த்தி, ஆழியாறு அணையில் இருந்தும் பாசனத்துக்கு தண்ணீர் வழங்குவதிலும், மற்ற அணைகளில் ஆழியாறு, திருமூர்த்திக்கும் தண்ணீர் கொண்டு செல்வதில், நீர் பங்கீடு முறையாக கிடைக்கவில்லை என பி.ஏ.பி., விவசாயிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.பாசன திட்டம் பற்றி, அதிகாரிகளுக்கு புரிதல் இல்லாததால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது.
இதுபோன்று, பி.ஏ.பி.,திட்டத்தில் நிலவும் பிரச்னைகளை களைய, காவிரி ஒழுங்காற்று குழு அமைத்துள்ளது போன்று, இத்திட்டத்துக்கும், நிலைக்குழுவை அமைக்க வேண்டும் என திட்டக்குழு வலியுறுத்தியுள்ளது.திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம், தொழில்நுட்ப வல்லுனர் குழுவிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பி.ஏ.பி., திட்டம், கேரளம், தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான பன்மாநில திட்டம். கடந்த, இரண்டு ஆண்டுகளாக திட்டத்தில் உள்ள திருமூர்த்தி அணையில், பாசனம் பெறும், மூன்று லட்சத்து, 77 ஆயிரத்து, 162 ஏக்கர் பாசன நிலங்களுக்கு உரிய நீர் பங்கீடு கிடைக்காமல் போராட்டங்கள் நடந்தது.இதற்கு காரணம், திட்டத்தில் உள்ள அம்சங்களை சரியாக புரிந்து கொள்ளாத நிலையே ஆகும். மிக, மிக சிக்கலான இந்த திட்டத்தில், இங்கு பணி புரியாத, திட்டத்தை பற்றி முழுமையாக அறியாத உயர்நிலை அலுவலர்களை நியமிப்பதும் முக்கிய காரணமாகும்.
கேரளா மாநிலத்துக்கு எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டு இருந்தும், அதை சரியாக புரிந்து கொள்ளாத உயர்நிலை அலுவலர்கள், தவறான முடிவு எடுத்து செயல்படுத்துகின்றனர். தமிழகத்தில், ஆழியாறு அணையில் பாசனம் பெறும் பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள், திருமூர்த்தி அணையில் பாசனம் பெறும் பழைய, புதிய ஆயக்கட்டு நிலங்களுக்கு எவ்வாறு தண்ணீர் வழங்க வேண்டும் என்று, 1991ம் ஆண்டு தமிழக அரசால் நியமிக்கப்பட்ட, பாசன நீர் மேலாண்மை கமிஷன் தெளிவாக கூறியுள்ளது.
ஆனால், இங்குள்ள அதிகாரிகள் அதை முறையாக செயல்படுத்துவதில்லை. விவசாயிகள் பயன்பெறும் வகையில், உன்னதமான இத்திட்டத்துக்கு, ஒரு நிலைக்குழுவை அமைக்க வேண்டும். அந்த நிலைக்குழுவில், இந்த திட்டத்தில் பணியாற்றிய பொறியாளர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டும். இந்த கோரிக்கையை, வல்லுனர் குழு, தமிழக அரசுக்கு சிபாரிசு செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

நிரந்தர தீர்வு தேவை!திட்டக்குழு தலைவர் கூறியதாவது:
சோலையாறு, பரம்பிக்குளம் அணைகளில் இருக்கும் தண்ணீரை, திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லும் போது, அளவுகளில் மாறுபாடு ஏற்படுகிறது.பாசனத்துக்கு தண்ணீர் வழங்கவும் அளவு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், வினியோகிக்கும் போது மாறுபடுகிறது. இதன் பின்னணியில், அரசியல், பண பலம் இருப்பதால், ஒப்பந்தமும், தண்ணீர் நிர்ணய அளவும் அடிக்கடி மீறப்படுகிறது.இதனால், இருமாநிலத்துக்கும், இங்குள்ள விவசாயிகளுக்கு இடையேயும் பிரச்னை ஏறபடுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண, நிலைக்குழு அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை