பரம்பிக்குளத்துக்கு கைகொடுக்கும் சோலையாறு!விடாது பெய்யும் மழையால் நீர்மட்டம் உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பரம்பிக்குளத்துக்கு கைகொடுக்கும் சோலையாறு!விடாது பெய்யும் மழையால் நீர்மட்டம் உயர்வு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

வால்பாறை:சோலையாறு அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால், பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.வால்பாறையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்கிறது. இதனால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை, கடந்த, 1ம் தேதி நிரம்பியது.தொடர்ந்து, 14 நாட்களாக அணை நிரம்பிய நிலையிலேயே காணப்படுகிறது. மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், இங்குள்ள நீர்வீழ்ச்சிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
இடைவிடாமல் பெய்யும் மழையால், மேல்நீராறு அணையில் இருந்து வினாடிக்கு, 2,301 கனஅடி தண்ணீரும், கீழ்நீராறு அணையிலிருந்து வினாடிக்கு, 339 கன அடி தண்ணீரும் சோலையாறு அணைக்கு திறந்து விடப்படுகிறது. இதனால், சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 163.31 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 6,191 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு, 6,989 கனஅடி தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்படுகிறது.இதனால், 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 40.50 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 6,987 கனஅடி தண்ணீர் வரத்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 239 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
ஆழியாறுக்கு தண்ணீர் திறப்பு
மழையால், 117 அடி உயரமுள்ள காடம்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 114 அடியாக உயர்ந்தது. இதே போன்று, 124 அடி உயரமுள்ள மேல்ஆழியாறு அணை நிரம்பியதையடுத்து, நேற்று காலை முதல், வினாடிக்கு, 600 கனஅடி தண்ணீர் ஆழியாறு அணைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், ஆழியாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 85.50 அடியாக உயர்ந்தது.
மழையளவு நிலவரம்!நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்):வால்பாறை - 28, சோலையாறு - 124, கீழ்நீராறு - 62, மேல்நீராறு - 62, பரம்பிக்குளம் - 42, காடம்பாறை - 3, மேல்ஆழியார் - 8, பொள்ளாச்சி - 34, நவமலை - 4, சர்க்கார்பதி - 10, வேட்டைக்காரன்புதுார் - 4, பெருவாரிப்பள்ளம் - 36, மணக்கடவு - 88, துாணக்கடவு - 27, பெதப்பம்பட்டி - 17, நெகமம் - 16, என்ற அளவில் மழை பெய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை