ஒரே நாளில் ரூ.31 லட்சம் வசூல்: மனை வரன்முறையில் மக்கள் தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில் ரூ.31 லட்சம் வசூல்: மனை வரன்முறையில் மக்கள் தீவிரம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சி பகுதியில், அங்கீகரிக்கப்படாத மனைகள் வரன்முறைப்படுத்துவதற்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. அதில், 61 பேர், சான்று பெற, கட்டணம் செலுத்தினர்.பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில், நகராட்சிக்குட்பட்ட அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் வரன்முறைப்படுத்துதல் தொடர்பான சிறப்பு முகாம் நேற்று நடந்தது.துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். கோவை மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் மதிவாணன், நகராட்சி கமிஷனர் (பொ) முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகரமைப்பு அலுவலர் கோபால் வரவேற்றார். இதில், நகரப்பகுதியில், அனுமதியற்ற மனைகள் வாங்கியோர், முறைப்படுத்திக்கொள்ள ஆர்வமாக வந்தனர். 'ஆன்லைனில்' விண்ணப்பித்தற்கான ரசீதுடன் வந்து, மேம்படுத்துதல் கட்டணம் மற்றும் முறைப்படுத்துதல் கட்டணம் செலுத்தி, வரன்முறை செய்தற்கான சான்று பெற்றுச் சென்றனர். நகரமைப்பு ஆய்வர்கள் பழனிக்குமார், வரதராஜன், ஜான்சிராணி மற்றும் அதிகாரிகள் சான்று வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:அனுமதியற்ற மனைகளை வாங்கியிருப்போர், தங்களது மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன் முறைப்படுத்திட சிறப்பு முகாம் நடந்தது.
மனைகளின் உரிமையாளர்கள், உரிய ஆவணங்களுடன் நகர் ஊரமைப்பு துறைக்கு கூர்ந்தாய்வு கட்டணமாக, 500 ரூபாய் செலுத்தி, 'ஆன் லைன்' மூலம் விண்ணப்பித்த ரசீதுடன் வந்திருந்தனர். விண்ணப்பித்திருந்த, 331 பேரில், 150 பேர் பங்கேற்றனர். அதில், 61 பேர் அங்கீகார சான்று பெற கட்டணம் செலுத்தினர். மொத்தம், 31 லட்சம் ரூபாய் வசூலானது. கட்டணம் செலுத்தியோருக்கு, சான்று வழங்கப்படுகிறது.அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகள், வரன்முறைப்படுத்திட நவ., 3ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வரன்முறைப்படுத்தாத மனைகளுக்கு, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, மின் இணைப்பு துண்டிப்பு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X