சத்துணவு ஊழியர்களுக்கு தாமதமாகும் மாத சம்பளம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சத்துணவு ஊழியர்களுக்கு தாமதமாகும் மாத சம்பளம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வால்பாறை:வால்பாறையிலுள்ள சத்துணவு ஊழியர்கள், கடந்த மாத சம்பளம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.வால்பாறை தாலுகாவில் உள்ள பல்வேறு பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் உட்பட, 185 பேர் பணியாற்றுகின்றனர்.இவர்களுக்கு, வால்பாறை நகராட்சி சார்பில் மாதம் தோறும் வங்கி சேமிப்பு கணக்கு மூலமாக சம்பளம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த மாதத்திற்கான சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. சத்துணவு ஊழியர்கள் கூறுகையில், 'வால்பாறை நகராட்சியில் சத்துணவு பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவதில்லை. காய்கறி காசு, கூடுதல் மையங்களை கவனிக்கும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை, மகப்பேறுகால விடுப்பு தொகைகள் உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை.அதிகாரிகளிடம் பல முறை வலியுறுத்தியும், பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. இதே நிலை நீடித்தால், நகராட்சி அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை