தரமற்ற உணவுகளை தடுக்க நுகர்வோர் இயக்கம் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தரமற்ற உணவுகளை தடுக்க நுகர்வோர் இயக்கம் வலியுறுத்தல்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பல்லடம்:பல்லடம் தாலுகா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க கூட்டம், கள்ளிப் பாளையம் அலுவலகத்தில் நடந்தது.அதன் தலைவர் மணிக்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு தலைவர் சிந்து சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கூட்டத்தில், பல்லடம் வட்டாரத்துக்கு உட்பட்ட பல இடங்களில், தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உயிருக்கு கேடு விளைவிக்கும், கலப்பட பொருட்கள், போலி சமையல் எண்ணெய், தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
அவற்றால், குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, பல்வேறு உடல் உபாதை ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அடிக்கடி கள ஆய்வு மேற்கொண்டு, தரமற்ற கலப்பட உணவு பொருட்களை கண்டறிந்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை