விபத்தை குறைக்க முடியுமா?அதிகாரிகள் குழுவினர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விபத்தை குறைக்க முடியுமா?அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்:திருப்பூரில் நடக்கும், விபத்துகளை தடுப்பது குறித்து அனைத்து துறை அலுவலர்ஆலோசனை கூட்டம் நடந்தது.சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துக்களை குறைக்க அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கமிஷனர் மனோகரன் தலைமை வகித்தார்.துணை கமிஷனர் உமா, நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் செல்வகுமார், மாநகராட்சி பொறியாளர்கள், ஆர்.டி.ஓ.,க்கள், போலீசார் பங்கேற்றனர்.
இதில், திருப்பூரில் நடக்கும் விபத்துகளை, 50 சதவீத அளவுக்கு குறைப்பது, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது, ஒழுங்குபடுத்துவது, இதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, விதிமுறை மீறுவோர் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, குமரன் ரோட்டில், அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை