மாநகராட்சி அலுவலகத்தில்அமைச்சர் ஆலோசனை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி அலுவலகத்தில்அமைச்சர் ஆலோசனை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்:திருப்பூரை, 'ஸ்மார்ட் சிட்டி'யாக அறிவித்து, அதன் வளர்ச்சிப் பணிகளுக்காக மத்திய அரசு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதற்கான திட்டப் பணிகள் குறித்து மாநகராட்சி அனைத்து துறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் நேற்று, மாநகராட்சியில் நடந்தது. அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். கலெக்டர் பழனிசாமி, கமிஷனர் அசோகன் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ.,க்கள் விஜயகுமார், குணசேகரன், நடராஜன், வருவாய் துறையினர், மாநகராட்சி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. துறைவாரியாக அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும், திட்டத்துக்கான அறிக்கையின் படி பணிகள் மேற்கொள்ளுதல், அதிகாரிகள் அளிக்க வேண்டிய ஒத்துழைப்பு குறித்தும் இதில் விளக்கப்பட்டது.
அமைச்சர் பேசுகையில், 'திருப்பூரை 'ஸ்மார்ட் சிட்டி'யாக அறிவித்து ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதை முறையாக பயன்படுத்தி உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். துரிதமாகவும், முறையாகவும் பணிகள் செய்து முடிக்க வேண்டும். அனைத்து வார்டுகளிலும், அடிப்படை வசதிகள் மேற்கொள்வதில் துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை