தொழிலாளி கொலையில்மேலும் ஒருவர் கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளி கொலையில்மேலும் ஒருவர் கைது

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்;காங்கயம் அருகே, வட மாநில தொழிலாளி கொலையான சம்பவத்தில், தேடப்பட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டார்.ஒடிசாவைச் சேர்ந்த சந்தோஷ்குமார், காங்கயம் அருகே பரஞ்சேர்வழியில் ஒரு கிரஷர் ஆலையில் வேலை செய்து வந்தார். கடந்த மாதம் அவர் தங்கியிருந்த அறையில், கொலை செய்யப்பட்டார். காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து, பிஜூ ஹம்ராம் மற்றும் பாபு நாயக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய முக்கிய நபரான காளியா நாயக், 24 தலைமறைவானார்.
தனிப்படை போலீசார் ஒடிசா உள்ளிட்ட பல பகுதிகளில் அவரை தேடினர். நேற்று ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் வைத்து, தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்.அவரை, போலீசார் காங்கயம் ஜே.எம். கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை