'மாணவருக்கு பொறுப்புணர்வு குறைகிறது!'கிருஷ்ணராஜ் வாணவராயர் கவலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'மாணவருக்கு பொறுப்புணர்வு குறைகிறது!'கிருஷ்ணராஜ் வாணவராயர் கவலை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள், பதவி ஏற்பு விழாவில், கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க தீர்மானிக்கப்பட்டது. திருப்பூர் மேற்கு (மங்கலம்) ரோட்டரி சங்கத்தின் புதிய தலைவராக பாலசுப்ரமணியம், செயலாளராக நடராஜமூர்த்தி, பொருளாளராக ரகுபதி மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, மங்கலம் மேற்கு ரோட்டரி ஹாலில் நடந்தது. விழாவுக்கு, உடனடி முன்னாள் தலைவர் பாரதிதாசன் வரவேற்றார். செயலாளர் வேலுச்சாமி, ஆண்டறிக்கை வாசித்தார். அதன்பின், புதிய சங்க நிர்வாகிகள் மற்றும், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், பதவி ஏற்றுக் கொண்டனர்.விழாவில், கோவை பாரதீய வித்யாபவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசியதாவது: புதிய நிர்வாகிகள் தலைமையில் அமையவுள்ள இந்த ரோட்டரி சங்கம், மக்கள் இயக்கமாக காணப்படுகிறது. காரணம், ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய் மதிப்பில், நலத்திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர். திருப்பூர் சார்ந்து செயல்படும் ரோட்டரி சங்கங்களில், ஒருங்கிணைப்பு மற்றும் ஒழுக்கம் உள்ளது. இன்றைய சூழலில், மாணவ, மாணவியர் இடையே விழிப்புணர்வு இருந்தாலும், பொறுப்புணர்வு இல்லை. ஆகையால், வருங்கால சந்ததியருக்கு ஆளுமை பண்பை வளர்க்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே நல்ல தலைமை கிடைக்க பெறும். இவ்வாறு, கிருஷ்ணராஜ் வானவராயர் பேசினார்.
இலங்கை கண்டி ரோட்டரி சங்க உதவி கவர்னர் ஜான் பாஸ்கர் பேசுகையில், ''இலங்கை, கண்டியில் உள்ள ரோட்டரி சங்கம், மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம், உள்ளாட்சி அமைப்புடன் இணைந்து, சுகாதாரத் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது. அதேபோல், இந்த ரோட்டரி சங்கத்தின் செயல்பாடும் இருத்தல் வேண்டும்,'' என்றார்.
முன்னதாக, மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில், சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார், மண்டல ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியம், மண்டல செயலாளர் முத்துராமலிங்கம், உதவி ஆளுநர் சுப்ரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை