சிறுமி பாலியல் பலாத்காரம்:தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிறுமி பாலியல் பலாத்காரம்:தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருப்பூர்:காங்கயம் அருகே, 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு, மகிளா கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது.திருவாரூர் நன்னிலத்தை சேர்ந்த முனியாண்டி மகன் மதியழகன், 29. கூலி தொழிலாளி. காங்கயம் அருகேயுள்ள ஒரு ஊரில், தேங்காய் களத்தில் தங்கி, வேலை செய்து வந்தார். அருகிலுள்ள பகுதியில், வசித்து வந்த இரு குடும்பங்களில், 14 மற்றும் 12 வயது சிறுமியும் இருந்தனர்.
இதில், 14 வயது சிறுமியை, மதியழகன், 2016ல் பாலியல் பலாத்காரம் செய்தார். அவரின் மிரட்டலுக்கு பயந்து சிறுமி இதை யாரிடமும் சொல்லவில்லை. இந்நிலையில், மற்றொரு சிறுமியிடமும், மதியழகன் மொபைல் போனில் ஆபாச படம் காட்டி, தவறாக நடக்க முயன்றான். அதிர்ச்சியடைந்த சிறுமி, இது குறித்து 14 வயது சிறுமியிடம் கூறினாள். இருவரும், ஈரோடு மாவட்ட குழந்தை பாதுகாப்பு குழுவினரிடம் சென்று, நடந்ததை கூறினர்.இது குறித்து, குழந்தை பாதுகாப்பு குழு மூலம் காங்கயம் மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார் மதியழகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திருப்பூர் மாவட்ட மகிளா கோர்ட்டில், நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில், மதியழகனுக்கு, ஒரு ஆயுள் தண்டனை, ஏழாண்டு மற்றும் ஆறாண்டு சிறைத் தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க அரசுக்கு நீதிபதி பரிந்துரைத்தார். தீர்ப்புக்குப்பின், மதியழகன், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை