காற்று வாங்கும் 'காதி கிராப்ட்' அங்காடி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காற்று வாங்கும் 'காதி கிராப்ட்' அங்காடி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அவிநாசி:நெசவாளர்கள் மற்றும் கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தமிழ்நாடு கதர்கிராம தொழில் வாரியம், பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தாலுகா வாரியாக செயல்படும் காதி கிராப்ட் கடைகள் மூலம், கதர் வேட்டி, துண்டு, பட்டுப்புடவை, கதர் சட்டை, போர்வை, என, பல பொருட்கள் விற்கப்படுகின்றன.அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், காதி கிராப்ட் கடை செயல்படுகிறது. இதன், கூரை பெயர்ந்து விழும் நிலையில், முகப்பு தோற்றம் பொலிவிழந்து காணப்படுகிறது.
பொதுமக்கள் கூறுகையில், 'காதி பொருட்களுக்கு புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க, காதி கிராப்ட் முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், அவிநாசியில் இதற்கான எந்த முயற்சியையும் ஊழியர்கள் எடுப்பதில்லை. கடையின் அமைப்பை பார்த்தாலே, மக்கள் யாரும் போக மாட்டார்கள். உயரதிகாரிகள் ஆய்வு செய்து, கடையை பொலிவுபடுத்தி, விற்பனையை அதிகரிக்க, வணிக வளாகம் கட்டி வாடகைக்கு விட்டு, காதி கிராப்ட்டுக்கு வருமானத்தை பெருக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை