அதிவேக மணல் லாரிகளை சிறைப்பிடித்து, மறியல் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அதிவேக மணல் லாரிகளை சிறைப்பிடித்து, மறியல்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பழநி, பழநி அருகே சின்னகாந்திபுரத்தில் மண் லோடுடன், அதிவேகமாக சென்ற லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள் மறியல் செய்தனர்.பழநி அருகே பாப்பம்பட்டி, பொந்துப்புளி, பச்சையாறு, காவலப்பட்டி, பெரியம்மாபட்டி போன்ற இடங்களில் குளம், பட்டா, புறம்போக்கு நிலத்தில் மண் அள்ளுகின்றனர். சிலர் முறையாக அனுமதி இல்லாமல் மண், மணல் திருடுகின்றனர்.லோடுடன் வரும் லாரிகள் அதிவேகமாக செல்வதால் சின்னகாந்திபுரம், பெரியம்மாபட்டி ரோடு சேதமடைந்து உள்ளது. தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை கண்டித்து அந்த ஊர் பொதுமக்கள் நேற்று மண் அள்ளிவந்த பத்துக்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்தனர்.அவர்களுடன் தாலுகா போலீஸ் எஸ்.ஐ., செல்வராஜ் பேச்சுவார்த்தை நடத்தியபோது ஒருவரை தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ரோடு மறியல்செய்தனர். தொடர்ந்து நடந்த சமாதான பேச்சுவார்த்தையில் வேகமாக செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதால் மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை