'காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும்'

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உடுமலை:உடுமலை அருகே, விளைபொருட்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் உதவ வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலை ஜல்லிபட்டி, மானுப்பட்டி, தளி உட்பட கிராமங்களில், மா சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாகுபடியில், மாங்காய் பறிக்கும் சீசனில், விளைநிலங்களில், ஊடுருவி, காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவது அதிகரித்துள்ளது. அவை, இரவு நேரங்களில், கூட்டமாக வந்து, அறுவடைக்கு தயாராக உள்ள மாங்காய் மற்றும் தானியங்களையும் சேதப்படுத்துகின்றன.
உடுமலை வனச்சரக எல்லையிலிருந்து வெகுதுாரம் தள்ளி அமைந்துள்ள, விளைநிலங்களுக்கும் காட்டுப்பன்றிகள் வருவது அதிகரித்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.ஜல்லிபட்டி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள மனுவில், 'காட்டுப்பன்றிகளால், அறுவடை சீசனில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறோம். மானாவாரி சாகுபடியில் நஷ்டம் ஏற்பட்டால், நிரந்தர கடனாளியாவதை தவிர வேறு வழியில்லை. மழை நீர் ஓடைகளில், பதுங்கி, இரவு நேரங்களில், விளைநிலங்களுக்குள் ஊடுருவும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த, வனத்துறையினர் உதவ வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை