பெரியகுளத்தில் குடிமராமத்து பணி ரூ.50 லட்சம் செலவில் தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெரியகுளத்தில் குடிமராமத்து பணி ரூ.50 லட்சம் செலவில் தீவிரம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உடுமலை:உடுமலை, பெரியகுளத்தில், 50 லட்சம் ரூபாய் செலவில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.திருமூர்த்தி அணை மூலம், ஏழு குளங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதில், பெரிய குளம், 404 ஏக்கர் பரப்பளவும், 70 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்டதாகும்.
குளத்தின் மூலம், 1,167 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பெரும்பாலும், கரும்பு மற்றும் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குளம் பராமரிப்பு இல்லாமலும், பாசன வாய்க்கால்கள் கரை சரிந்தும் கடும் பாதிப்பு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், தமிழக அரசின், குடி மராமத்து பணி திட்டத்தின் கீழ், பெரியகுளத்தில், 50 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. குளத்தின் கரை முழுவதும் பலப்படுத்தப்பட்டு, பாசன மடைகள், ெஷட்டர்கள் புதுப்பிக்கப்படுகிறது. பாசன வாய்க்கால் முழுவதும், துார்வாரப்படுகிறது. பழுதடைந்துள்ள உபரி நீர் வெளியேறும், கட்டமைப்பு முழுமையாக கட்டப்படுகிறது. இதே போல், மற்ற குளங்களிலும் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை