தக்காளி விலை, 'கிடுகிடு' உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தக்காளி விலை, 'கிடுகிடு' உயர்வு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உடுமலை:உடுமலையில், பருவமழை பெய்துவருவதால் தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.தமிழகம் முழுவதும் கடந்த ஒருவாரமாக தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. உடுமலையிலும் பரவலாக பெய்து வருகிறது. மழையின் எதிரொலியால், சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி விலை உயரத்துவங்கியுள்ளது.
உடுமலை சுற்றுவட்டாரத்தில் கணிசமான ஏக்கரில் தக்காளி, சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மைசூர் உள்ளிட்ட பகுதிகளின் வரவால் சின்னவெங்காயம் விலை குறைந்தது. அதேபோல் தக்காளி வரத்தும் அதிகளவு இருந்ததால் கிலோ, 8 முதல், 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் கடந்த சில தினங்களாக மழைப்பொழிவு இருந்து வருவதால்தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது.உழவர் சந்தையில் கிலோ தக்காளி, 20 ரூபாய்க்கும்,சின்ன வெங்காயம், 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அனைத்து காய்கறிகளும் விலையும் கணிச மான அளவில் உயர்ந்துள்ளது. பருவமழை நீடிக்கும் பட்சத்தில் மேலும் விலை உயர்வதற்கு வாய்ப்புள்ளதாக, தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை