மழை கைகொடுத்தால் பருத்தியில் இரட்டிப்பு ஆதாயம்:மானாவாரி விவசாயிகள் தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மழை கைகொடுத்தால் பருத்தியில் இரட்டிப்பு ஆதாயம்:மானாவாரி விவசாயிகள் தீவிரம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கிணத்துக்கடவு:பருவமழை பெய்வதால், விவசாயிகள் பருத்தி சாகுபடியில் தீவிரமடைந்துள்ளனர். சரியான தருணங்களில் மழை பெய்தால், மானாவாரி பருத்தி சாகுபடியில் இழப்பு ஏற்படாது.கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வடக்கு ஒன்றியங்களில் தென்மேற்கு பருவமழை பெய்வதால் விவசாயிகள் திருப்தி அடைந்துள்ளனர். தக்காளி நடவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கல்லாபுரம், வடபுதுார், சிங்கையன்புதுார் பகுதி விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக பருத்தி சாகுபடியிலும் ஈடுபட்டுள்ளனர்.
கிணறு, ஆழ்குழாய் கிணறுகளில் கிடைத்த நிலத்தடி நீரை கொண்டு, தென்னை, தக்காளி சாகுபடியில் ஈடுபட்டிருந்த விவசாயிகளும், பருத்தி சாகுபடிக்கு மாறியுள்ளனர்.கக்கடவை சேர்ந்த விவசாயி மகாலிங்கம், மூன்று ஏக்கர் நிலத்தில், 'ஆங்கூர்' ரக பருத்தி சாகுபடி செய்துள்ளார். அவர் கூறியதாவது:வடக்கிபாளையம், சூலக்கல், ஜமீன்காளியாபுரம், களத்துார், கானல்புதுார், சென்னியூர், பெரும்பதி, பாலார்பதி, வீரப்பகவுண்டனுார், முத்துக்கவுண்டனுார், சிங்கையன்புதுார், மீனாட்சிபுரம், வடபுதுார் மற்றும் கல்லாபுரம் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். அதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ளேன். பருத்தி விதை நடவுக்கு முன், மானாவாரி நிலத்தை இயற்கை உரம் கொண்டு பண்படுத்தி, விதை நடவு செய்யப்பட்டது.
தற்போது, இரண்டடி உயரம் வளர்ந்துள்ள செடிகளில் பூ பூத்துள்ளது. சித்திரையில் விதை நடவு செய்யும்போது, புரட்டாசியில் காய்ப்பு விடும். அதன்பின், இரண்டு மாத காலம் பருத்தி அறுவடை செய்யலாம். மீண்டும், இரண்டு மாத காலத்துக்குப்பின், செடிகள் தளிர்விட்டு, காய்த்து பலன் கொடுக்கும்.செடிகள் பூப்பதற்கு முன், உரமிட்டு, இரண்டு முறை களை எடுக்க வேண்டும். புழு இல்லாமல் பாராமரித்தால் பருத்தி பயிரில், ஒரு ஏக்கருக்கு, 10 முதல் 15 பொதி பருத்தி கிடைக்கும். அப்போதைய மார்க்கெட் விலையை பொறுத்து, லாபம் கிடைக்கும்.
சமீப காலமாக பருத்திக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், விலை வீழ்ச்சி இருக்காது. பருவமழை கைகொடுத்து, நிலத்தடி நீரும் இருந்தால் பருத்தியில் இரட்டிப்பு ஆதாயம் பெறலாம்.இவ்வாறு, விவசாயி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை