ஊராட்சி செயலர்களின் போராட்டம், 'வாபஸ்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி செயலர்களின் போராட்டம், 'வாபஸ்'

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிணத்துக்கடவு:ஊராட்சி செயலர்களின் காலவரையற்ற போராட்டம், வாபஸ் பெறப்பட்டதால், நேற்று முதல் பணிக்கு திரும்பினர்.பதிவுறு எழுத்தர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த, 4ம் தேதி முதல், ஊராட்சி செயலர்கள், ஒன்றிய ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தால், கிராமங்களில் குடிநீர் வினியோகம் தவிர, கிராம சுகாதாரம், வரி வசூல் மற்றும் ஒன்றிய அளவில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் அனைத்தும் முடங்கியது.இந்நிலையில், போராட்டத்தின், 10வது நாளான நேற்று முன்தினம், மாநில அளவிலான நிர்வாகிகள், அரசுடன் பேச்சு நடத்தினர்.
அதில், ஒரு மாத காலத்தில், கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக ஊராட்சி செயலர்கள் தெரிவித்தனர்.கோரிக்கைகளை நிறைவேற்ற தாமதமானால், ஆக.,1ம் தேதி முதல் மீண்டும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.இதனால், காலவரையற்ற போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. ஊராட்சி செயலர்கள், ஒன்றிய ஊழியர்கள் நேற்று முதல் பணிக்கு திரும்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை