மடத்துக்குளத்தில் பிரதமர் பெயரில் நூதன வசூல்:பொதுமக்கள் புகார்; வி.ஏ.ஓ., விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மடத்துக்குளத்தில் பிரதமர் பெயரில் நூதன வசூல்:பொதுமக்கள் புகார்; வி.ஏ.ஓ., விசாரணை

Added : ஜூலை 14, 2018
Advertisement

மடத்துக்குளம்;பிரதமர் பெயரில் நுாதன வசூலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மடத்துக்குளம் தாலுகாவுக்குட்பட்ட கிராமங்களில் நுாதன வசூலில் பலர் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி 50 ஆயிரம் ரூபாய் கடன் தருகிறார். தொகை சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும். மானியம் 15 ஆயிரம் ரூபாய். இதற்கு, முன்பதிவு செய்யுங்கள் என கூறி வசூல் நடக்கிறது.இதில், ஏமாந்த பொதுமக்கள் கூறியதாவது: தனிநபருக்கு 100 முதல் 200 ரூபாய் வரையும், சுயஉதவி குழுக்களுக்கு 2,000 ரூபாயும் வசூலிக்கின்றனர். ரசீது எதுவும் கொடுப்பது இல்லை. ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு, வங்கிக்கணக்கு எண், புகைப்படம் பெற்றுள்ளனர். பல இடங்களில் இதுபோல் நடப்பதாக தகவல் கிடைத்தது. சந்தேகம் ஏற்பட்டு, விசாரித்தபோது, கிருஷ்ணாபுரம், கழுகரை, சோழமாதேவி, கண்ணாடிப்புத்துார், சர்க்கரைஆலை பகுதி, போத்தநாயக்கனுார், கணியூர் உள்ளிட்ட பல கிராமங்களில் வசூல் நடப்பது தெரிந்தது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.பிரச்னை தீவிரமானதால், வடக்கு கண்ணாடிப்புத்துார் கிராமத்தில், பணம் வசூலித்த நபர் வீட்டைபெண்கள் முற்றுகையிட்டனர். தொகை வசூலித்த பெண், தனக்கு அடுத்த நிலையிலுள்ள, ஏஜன்ட் வீட்டுக்கு அழைத்துச்சென்றார்.
அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் முஜிபுர் ரகுமான், ஏஜன்டிடம் விசாரித்தபோது, பொள்ளாச்சி அருகே கோமங்கலம்புதுாரிலுள்ள கல்பனாவிடம் வசூல் தொகையை கொடுக்கிறோம் என தெரிவித்தார்.இது குறித்து சம்பந்தப்பட்ட கல்பனா கூறியதாவது: வெளிநாட்டில் கல்லுாரி பேராசிரியராக இருந்தேன், தற்போது, இங்கு தங்கி உள்ளேன்.
அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு சேர்வதற்காக 'ஹெல்பிங் பெல்' என்ற சேவைநிறுவனம் தொடங்கி உள்ளேன். இதற்காக நான் அச்சடித்த நோட்டீஸ்களை பயன்படுத்தி பிரதமர் பெயரில் வசூல் நடந்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
என் பெயரை கூறியவர்களை, பார்த்ததே இல்லை. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்.இவ்வாறு, அவர் கூறினார். கிராமநிர்வாக அலுவலர் முஜிபுர்ரகுமான் கூறுகையில், '' கண்ணாடிப்புத்துார் பகுதியில் வசூலில் ஈடுபட்ட நபர் பணத்தை திரும்ப ஒப்படைப்பதாக உறுதி கொடுத்தார். கடுமையாக அவரை எச்சரித்துள்ளோம். ஆனால் பல கிராமங்களில் இதுபோல் மோசடி வசூல் நடப்பதாக தெரிகிறது. இது மோசடியான செயல் மக்கள் ஏமாற வேண்டாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை