கேரளா சித்தூர் கல்லூரியில் எம்.பில்., துவங்க அனுமதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கேரளா சித்தூர் கல்லூரியில் எம்.பில்., துவங்க அனுமதி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கொழிஞ்சாம்பாறை:கேரள மாநிலம், சித்துார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், எம்.பில்., பட்டப்படிப்பு துவங்க அரசு அனுமதி அளித்துள்ளது.கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்துாரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, 1947ம் ஆண்டு முதல் செயல்படுகிறது.கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் கீழ் இந்த கல்லுாரி இயங்கி வருகிறது. இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளன.கடந்த, 40 ஆண்டுகளாக, இங்குள்ள தமிழ்துறை ஆராய்ச்சித் துறையாக செயல்படுகிறது. தற்போது, 15 முனைவர் பட்ட (பிஎச்.டி.,) ஆய்வு மாணவர்கள் உள்ளனர்; எட்டு பேருக்கு நேர்காணல் முடிந்துள்ளதால், ஆய்வு மாணவர்களின் எண்ணிக்கை, 23 ஆக உயர்ந்துள்ளது.கல்லுாரியில், சித்துார் மற்றும் பாலக்காடு, பொள்ளாச்சி, மீனாட்சிபுரம் பகுதியில் இருந்தும் மாணவர்கள் படிக்க வருகின்றனர். ஆராய்ச்சி படிப்புகள் உள்ள நிலையில், எம்.பில்., பட்ட மேற்படிப்பு துவங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. கல்லுாரி பேராசிரியர்கள் கூறுகையில், 'கல்லுாரியில், எம்.பில்., தமிழ் மற்றும் கணிதம் பாடங்களை துவங்க அரசு அனுமதி அளித்துள்ளது. விரைவில் பாடப்பிரிவுகள் துவங்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை