மலைவாழ் குடியிருப்பில் கால்நடைத்துறை முகாம்:'தினமலர்' செய்தி எதிரொலி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மலைவாழ் குடியிருப்பில் கால்நடைத்துறை முகாம்:'தினமலர்' செய்தி எதிரொலி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உடுமலை;உடுமலை, அமராவதி வனச்சரகங்களுக்கு உட்பட்ட, மேற்குத்தொடர்ச்சிமலை பகுதிகளில், குழிப்பட்டி, குருமலை, மாவடப்பு, ஈசல் திட்டு, ஆட்டுமலை, கோடந்துார், தளிஞ்சி என, 18 மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. வாழ்வாதாரத்திற்காக, விவசாயம், தைலம் காய்ச்சுதல், கால்நடை வளர்ப்பு ஆகிய தொழில்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளில், பெரும்பாலும் நாட்டு மாடு இனங்களே அதிகளவு வளர்க்கப்படுகிறது. மழை காலங்களில் தீவனங்கள் பிரச்னை இல்லை என்றாலும், வறட்சி காலங்களில் தீவன பற்றாக்குறை ஏற்பட்டு, பாதிப்பு ஏற்படுகிறது. பால் உற்பத்தி, கால்நடை பராமரிப்பு போன்றவைக்கு உதவிகள் கிடைக்காமல் உள்ளது.இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியானது; இதனையடுத்து, வரும், 19ம் தேதி, மாவடப்பு மலை வாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில், கால்நடைத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
கால்நடைத்துறை அதிகாரிகள் கூறியதாவது :'தினமலர்' செய்தியை தொடர்ந்து, அமைச்சர் ராதாகிருஷ்ணன், மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளில், சிறப்பு முகாம்கள் நடத்தி, தேவையான உதவிகள் செய்ய அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில், வரும், 19ம் தேதி, மாவடப்பு மலைவாழ் மக்கள் குடியிருப்பில் சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், அமைச்சர், கலெக்டர் மற்றும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை