கொலை குற்றவாளி ஆஜராக உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கொலை குற்றவாளி ஆஜராக உத்தரவு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உடுமலை:உடுமலை ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை ஞானம் என்பவரை, கொலை செய்து, நகைகள் கொள்ளையடித்த வழக்கு மற்றும் 2009ல், உடுமலை சித்தக்குட்டையில், செந்தில்குமார் கொலை செய்யப்பட்டு, பி.ஏ.பி., வாய்க்காலில் வீசிய வழக்கில் தொடர்புடைய, உடுமலை எலையமுத்துார்பிரிவைச்சேர்ந்த, மணிகண்டன், 39, மீது, உடுமலை ஜே.எம்., 1 நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. வழக்கில் ஆஜராகாத நிலையில், கோர்ட் மூலம் பிடிவாரன்ட் பிறக்கப்பட்டது. இருப்பினும், தலைமறைவாக உள்ள, மணிகண்டன் சிக்கவில்லை.இது குறித்து, உடுமலை, ஜே.எம்., 1 மாஜிஸ்திரேட் ஷபீனா, அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், 'மணிகண்டன், வரும், ஆக., 13ல், கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை