தென்னந்தோப்புக்குள் புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு மீட்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தென்னந்தோப்புக்குள் புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உடுமலை:திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள, மானுப்பட்டி, பெருமாள் கரடு அடிவாரத்தில், வேலு என்பவருக்கு சொந்தமான, தென்னந்தோப்பு உள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியாக உள்ள நிலையில், பெரிய மலைப்பாம்பு தோப்புக்குள் வந்துள்ளது. நேற்றுமுன்தினம் மாலை, மலைப்பாம்பை விவசாயிகள் பார்த்துள்ளனர். வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் எட்டு அடி நீளத்தில் இருந்த மலைப்பாம்பை மீட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.உடுமலை வனச்சரக அலுவலர் தனபாலன் கூறுகையில், 'விவசாயத்தோட்டத்திற்குள் புகுந்த மலைப்பாம்புக்கு, ஐந்து வயது இருக்கலாம். மீட்கப்பட்ட பாம்பு நல்ல உடல் நலத்துடன் உள்ளதால், புங்கன் ஓடை வனப்பகுதியில் விடப்பட்டது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை