திருச்சியில் பணத்தாள் கண்காட்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருச்சியில் பணத்தாள் கண்காட்சி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருச்சி: திருச்சியில், பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில், உலக பணத்தாள்கள் கண்காட்சி நேற்று துவங்கியது.


திருச்சி, எம்.பி., குமார் துவங்கி வைத்தார். வரும், 15ம் தேதி வரை, மூன்று நாட்கள் நடக்கிறது. பணத்தின் பரிணாம வளர்ச்சி மற்றும் உலக பணத்தாள்கள், நாணயங்கள், தபால் தலைகள், பழமையான பொருட்கள் ஆகியவற்றை, இளைய தலைமுறையினர், மாணவ மாணவியர் அறிந்து கொள்ளும் வகையில், இந்த கண்காட்சி நடக்கிறது. இங்குள்ள, 50 ஸ்டால்களில், 200 நாடுகளின் பணத்தாள்கள், நாணயங்கள், தபால் தலைகள் மற்றும் நினைவு தபால் தலைகள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. செம்பு, வெள்ளி, பித்தளை, நிக்கல் உள்ளிட்ட உலோகங்களால், வட்டம், சதுரம், அறுகோண வடிவங்களில் உருவாக்கப்பட்ட நாணயங்கள், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது தவிர, அரிய விலங்குகளின் எலும்புக் கூடுகள், பழங்கால மக்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் போன்றவையும், கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. துவக்க நாளான நேற்று, பள்ளி மாணவ மாணவியர், வரலாற்று ஆய்வாளர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X