பெண்களை ஈர்க்கும் 'சில்க் எக்ஸ்போ'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெண்களை ஈர்க்கும் 'சில்க் எக்ஸ்போ'

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கல்லுாரி மாணவியர் மற்றும் இல்லத்தரசிகளுக்கு குஷியான செய்தி.கோவை - அவிநாசி ரோடு, சுகுணா கல்யாண மண்டபத்தில், 'சில்க் எக்ஸ்போ' கண்காட்சி துவங்கியிருக்கிறது. கோவையின் பிரத்யேக கைத்தறி சேலைகள், காஞ்சிபுரம் பட்டு, பெங்களுரூ சில்க், கர்நாடகா பட்டுச்சேலைகள், போச்சம்பள்ளி, மங்கள்கிரி ஆடைகள், ஆந்திரபிரதேசத்தின் பட்டு ஜரிகை, பாகல்பூர், பீகார் கதர் ஆடைகள், கோட்டா சேலைகள், மல்பெரி உள்ளிட்ட ஆடை ரகங்கள் இடம்பெற்றுள்ளன.மத்தியபிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், உத்தரபிரதேசம், மேற்குவங்கம், மகாராஷ்டிரா போன்ற நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் பிரத்யேக கைத்தறி சேலைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. குறைந்தது, 500 முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை, பல்வேறு விலைகளில் கிடைக்கும். வாடிக்கையாளர்களை கவரும் விதமாக, 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் குப்தா கூறுகையில், ''கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிப்பதே, இக்கண்காட்சியின் நோக்கம். விரும்பியதை தேர்ந்தெடுக்க ஆயிரக்கணக்கான ஆடை ரகங்களை தருவித்துள்ளோம். கைத்தறி கலைஞர்கள், தங்களது தயாரிப்புகளை நேரடியாக விற்பனை செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது. வரும், 16 வரை நடக்கும் இக்கண்காட்சியை, காலை, 10:30 முதல் இரவு, 8:30 மணி வரை பார்வையிடலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை