உலக புலிகள் தின விழிப்புணர்வு மாணவர்களுக்கு அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உலக புலிகள் தின விழிப்புணர்வு மாணவர்களுக்கு அழைப்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உலக புலிகள் தினம், வரும், 29ல் கடைபிடிக்கப்படுகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோயமுத்துார் இயற்கை பாதுகாப்பு சங்கம், மேட்டுப்பாளையம் ரோட்டரி கிளப், நிர்மலா மகளிர் கல்லுாரி, பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லுாரி சார்பில், 'கிளஸ்டர் இன்ஸ்டிட்யூட் ஆப் மீடியா அண்டு டெக்னாலஜி' கல்லுாரியில், வரும், 20ல் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள், நான்கு பிரிவுகளாகவும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தனி ஒரு பிரிவாகவும், கல்லுாரி மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடக்கும். ஓவியம், பேச்சு, நாடகம் உள்ளிட்ட, பல்வேறு போட்டிகள் நடப்பதால் பங்கேற்பாளர்கள், வரும், 18க்குள், ncs.cbe1@gmail.com என்ற இ-மெயில் முகவரியில் விண்ணப்பிக்கலாம்.புலிகள் மற்றும் காட்டுயிர்களை காப்பதன் அவசியம், சூழலியலில் புலிகளின் பங்களிப்பு, காடு, வன உயிர்கள், நீர் மற்றும் இயற்கை பாதுகாப்பில் மக்களின் பங்கு, புலிகளுக்கான அச்சுறுத்தல்கள் ஆகிய தலைப்புகளில், போட்டிகள் நடத்தப்படும்.கூடுதல் தகவலுக்கு, 95002 66921/ 94423 59292/ 95976 46134 ஆகிய, எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை