வாசகர் திருவிழா நாளை துவக்கம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாசகர் திருவிழா நாளை துவக்கம் 

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை விஜயா பதிப்பகம் சார்பில், வாசகர் திருவிழா மற்றும் புத்தக கண்காட்சி நாளை துவங்குகிறது.விஜயா பதிப்பகம் சார்பில், ஆண்டுதோறும் வாசகர் திருவிழா மற்றும் புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது. இக்கண்காட்சி, காந்திபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள கமலம் துரைசாமி ஹாலில் நாளை துவங்கி, ஆக., 19 வரை நடக்கிறது.திருப்பூர் கூடுதல் மாவட்ட நீதிபதி முகமது ஜியாவுதீன் துவக்கி வைத்து உரையாற்றுகிறார். கண்காட்சி அரங்கில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், திரைப்பட கலைஞர்கள் பங்கேற்று உரையாற்றுவர்.பதிப்பக உரிமையாளர் வேலாயுதம் கூறுகையில், ''கோவை மக்கள் மத்தியில் புத்தகம் வாசிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. பள்ளி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை புத்தகம் வாசிக்கின்றனர். கவிதை, கட்டுரை, நாவல்கள் என, இலக்கிய தரமான நுால்களை தேர்ந்தெடுத்து வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.கண்காட்சியில் வாங்கும் புத்தகங்களுக்கு, 10 முதல், 50 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X