பஸ் பாஸ் வழங்க ஒரே ஒரு 'கவுன்டர்' கல்லூரி மாணவர்களுக்கு கால விரயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் பாஸ் வழங்க ஒரே ஒரு 'கவுன்டர்' கல்லூரி மாணவர்களுக்கு கால விரயம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வடவள்ளி:மருதமலை பஸ் டிப்போவில் பஸ் பாஸ் வழங்க,ஒரே ஒரு 'கவுன்டர்' மட்டுமே செயல்படுவதால், மாணவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.தமிழக அரசு சார்பில், பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அந்தந்த பள்ளிகளிலேயே வழங்கப்படுகிறது. கல்லுாரி மாணவர்கள், பணிக்கு செல்வோருக்கு குறைந்த கட்டணத்தில் மாதாந்திர பஸ் பாஸ், அரசு போக்குவரத்து கழகத்தால் வினியோகிக்கப்படுகிறது; கோவையில், காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லுார், மருதமலை ஆகிய பஸ் டிப்போக்களில், இந்த பஸ் பாஸ்களை வாங்கலாம்.
ஒவ்வொரு மாதமும், 1 முதல், 15 வரை டிப்போக்களில், காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை பஸ் பாஸ் வினியோகிக்கப்படுகிறது. மற்ற பஸ் டிப்போக்கள், நகர் பகுதியில் அமைந்திருப்பதால், வடவள்ளி, தொண்டாமுத்துார், கணுவாய் சுற்றுவட்டார பகுதி மக்கள், பாரதியார் பல்கலை, சட்டக்கல்லுாரி, தனியார் கல்லுாரி மாணவர்களும் பஸ் பாஸ் எடுப்பதற்காக, மருதமலை டிப்போவுக்கு வருகின்றனர்.
மருதமலை டிப்போவில், பஸ் பாஸ் வழங்க ஒரு 'கவுன்டர்' மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இதனால், காலை, 10:00 மணி முதலே மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வருகையால், பஸ் பாஸ்க்கு விண்ணப்பிக்கும் வரிசை, நீண்டு கொண்டே செல்கிறது. இதனால், பஸ் பாஸ் பெற நான்கு நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இம்மாதத்திற்கான பஸ் பாஸ் வழங்குவது, நாளையுடன் நிறைவடைய உள்ளது. அடுத்த மாதத்தில் இருந்தாவது கூடுதல் 'கவுன்டர்' அமைத்து, பஸ் பாஸ் வழங்க மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை