வரவேற்பு விழாவுக்கு தடை; மாணவியர் சாலை மறியல்!தலைமையாசிரியருக்கு பறந்தது 'மெமோ' | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வரவேற்பு விழாவுக்கு தடை; மாணவியர் சாலை மறியல்!தலைமையாசிரியருக்கு பறந்தது 'மெமோ' 

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கோவை:பிளஸ் 1 மாணவியருக்கு வரவேற்பு விழா கொண்டாட அனுமதிக்காததால், கோவை எஸ்.ஆர்.பி., அம்மணியம்மாள் மாநகராட்சி பள்ளி மாணவியர், நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்துக்கு விளக்கம் அளிக்கக்கோரி, முதன்மை கல்வி அலுவலர் மற்றும் தலைமையாசிரியருக்கு 'மெமோ' வழங்கப்பட்டது.
கோவை, ஆர்.எஸ்.புரம், எஸ்.ஆர்.பி., அம்மணியம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், கடந்த, 11ம் தேதி, பிளஸ் 1 மாணவியருக்கு வரவேற்பு விழா கொண்டாட, அனுமதி வழங்கப்பட்டது. விழா ஏற்பாடு நடந்த நிலையில், மழை காரணமாக, பள்ளி வளாகத்திற்குள் தண்ணீர் தேங்கியது. இதை அப்புறப்படுத்தியதோடு, மாணவர்கள் கூடிய பின், வரவேற்பு விழா கொண்டாட வேண்டாமென தலைமையாசிரியை மல்லிகா மறுத்துள்ளார்.
இதுகுறித்து கேள்வி எழுப்பிய மாணவியரை, அவர் கடுமையாகத் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், பள்ளி முடிந்த பின், 50 மாணவியர், மாநகராட்சி கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். துணை கமிஷனர் காந்திமதியை சந்தித்து, புகார் மனு கொடுத்தனர். அவர் விசாரித்து, நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, அனுப்பி வைத்துள்ளார். அன்றைக்கு தள்ளி வைக்கப்பட்ட வரவேற்பு விழா, மறுநாள் (ஜூலை 12) நடந்துள்ளது.நேற்று மாணவியர் மீண்டும் கூடினர். கல்வி கட்டணம் வசூலித்ததற்கு, ரசீது வழங்கக்கோரியும், மாணவியரை திட்டிய தலைமையாசிரியரை இடம் மாற்றக்கோரியும் நேற்று மாலை, பள்ளி வளாகத்திற்கு வெளியே, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு சென்று, முதன்மை கல்வி அலுவலர் ரவி, மாணவியருடன் சமாதான பேச்சு நடத்தினார்; ஒன்றரை மணி நேரத்திற்கு பின், மாணவியர் கலைந்து சென்றனர்.இருவருக்கு 'மெமோ'தலைமையாசிரியை மல்லிகா கூறுகையில்,''மழை காரணமாக, விழா கொண்டாட வேண்டாமென அறிவுறுத்தினேன்; யாரையும் திட்டவில்லை. பெற்றோர் ஆசிரியர் கழக ஒப்புதலோடு, தற்காலிக பணியாளர்கள் ஏழு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக, மாணவியரிடம் வசூலிக்கப்பட்ட கட்டணத்திற்கு, ரசீது தரப்பட்டுள்ளது. மாநகராட்சி கல்வி அலுவலகத்திற்கு, மாணவியர் சென்றது எனக்கு தெரியாது. எனக்கு எதிராக மாணவியரை, யாரோ துாண்டிவிட்டதால், இப்பிரச்னை பெரிதாகியுள்ளது,'' என்றார்.
மாநகராட்சி துணை கமிஷனர் காந்திமதி கூறுகையில்,''பள்ளி மாணவியரின் பிரச்னையை, வளாகத்துக்குள் பேசி முடிக்காததால், தலைமையாசிரியருக்கு 'மெமோ' அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து, உடனடி நடவடிக்கை எடுக்காததால், முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) ரவிக்கு, நோட்டீஸ் அளிக்கப்பட்டது; இருவரும், 15 நாட்களுக்குள், இப்பிரச்னைக்கு விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Pollachi  ( Posted via: Dinamalar Windows App )
14-ஜூலை-201818:06:16 IST Report Abuse
Ram நல்ல தரமான ஆசிரியர்களை கொண்ட மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி. இருக்கும் இடத்தில் இருந்து பல பொருட்களை இலவசமாக கொடுத்து ( சானிட்டரி நாப்கின் உட்பட) மாணவிகளை ஊக்குவிக்கும் பள்ளியின் நல்ல பெயரை பிறர் சொல்வதை கேட்டு தடம் மாறவேண்டாம். கொடுத்த பணத்திற்கு ரசீது கேட்கலாம். இட மாற்ற கோரிக்கை தேவைதானா? படிப்பில் மட்டும் கவனத்தை வையுங்கள் மாணவிகளே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X