விமான படை தளத்தில் ஏர்மார்ஷல் ஆய்வு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விமான படை தளத்தில் ஏர்மார்ஷல் ஆய்வு 

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை:சூலுார் விமானப்படை தளத்தில் நடந்து வரும் பணிகளை பார்வையிட்ட, இந்திய விமானப்படை பராமரிப்பு ஆணைய தலைமை அதிகாரியான ஏர்மார்ஷல் ஹேமந்த் சர்மா, பணியாளர்களை பாராட்டினார்.சூலுார் விமானப்படை தள பராமரிப்பு டெப்போவில், போர் விமானங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிப்பு பணி நடந்து வருகிறது.
அப்பணிகளை ஆய்வு செய்த ஹேமந்த் சர்மா, ''போர் விமானங்களுக்கான உதிரி பாகங்கள் வெளிநாடுகளில் இருந்தே அதிகளவில் இறக்குமதியாகி வந்தது. இப்போது உள்நாட்டிலேயே நல்ல தரத்தில் தயாராகி வருவது பாராட்டத்தக்கது. இதன் மூலம், அந்நிய செலாவணி மிச்சமாகும். நாமும் தன்னிறைவு பெறுவோம்,'' என்று பணியாளர்களை பாராட்டினார்.மனைவி குசும் சர்மாவுடன் சூலுார் வந்த ஹேமந்த் சர்மா, நேற்று (13ம் தேதி) வரை சூலுாரில் தங்கியிருந்து, பணிகளை ஆய்வு செய்தார். விமானப்படையினர் மனைவியர் நலசங்க தலைவராக இருக்கும் குசும் சர்மா,பணியாளர்களின் குடும்பத்தினரை சந்தித்து உரையாடினார். பின், அவர்கள் நாக்பூர் புறப்பட்டு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை