வெள்ளத்தில் சிக்கி யானை தத்தளிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெள்ளத்தில் சிக்கி யானை தத்தளிப்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேட்டுப்பாளையம்:பவானி ஆற்றுக்கு தண்ணீர் குடிக்க வந்த ஆண் யானை, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இரண்டு மணி நேர போராட்டத்துக்குபின், வெள்ளத்தில் இருந்து தானாகவே கரையேறியது.மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட நெல்லிமலையில் யானைகள் கூட்டமாக வாழ்கின்றன. மலையை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை சாப்பிடும் இந்த யானைகள், இரவில் சமயபுரம் வழியாக வனபத்ரகாளியம்மன் கோவில் மெயின் ரோட்டை கடந்து, பவானி ஆற்றுக்கு தண்ணீர் குடிக்கச் செல்வது வழக்கம். தண்ணீர் குடித்ததும், கல்லாறு வனப்பகுதிக்குச் சென்று விடும்.
நேற்று முன்தினம் இரவு நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து ஒரு ஆண் யானை சமயபுரம் வழியாக பவானி ஆற்றுக்கு தண்ணீர் குடிக்கச் சென்றது. பவானி ஆற்றில் வினாடிக்கு, 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட்டதால், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தண்ணீரை குடித்த யானை, கல்லாறு வனப்பகுதிக்கு செல்ல முயற்சித்தது. தண்ணீர் அதிகமாக செல்வதை பார்த்த யானை, ஆற்றை கடக்க முடியாமல் கரை ஓரத்தில் நின்று விட்டது.
காலை, 6:00க்கு ஆட்கள் நடமாட்டத்தை பார்த்த யானை, கல்லாறு வனப்பகுதிக்கு செல்ல ஆற்றுக்குள் இறங்கியுள்ளது. அப்போது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இரண்டு மணி நேரம் போராடி, நீந்தி கரையை அடைந்தது. மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமையிலான வனத்துறையினர், அந்த யானையை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை