கர்ப்பிணிக்கு மூச்சுத்திணறல்:  அரசு மருத்துவமனைக்கு மாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கர்ப்பிணிக்கு மூச்சுத்திணறல்:  அரசு மருத்துவமனைக்கு மாற்றம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை;பொள்ளாச்சியை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பொள்ளாச்சி, கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம்; கூலி தொழிலாளி. இவரது மனைவி கார்த்திகா, 19. ஆறு மாத கர்ப்பிணியான இவருக்கு, ரத்தம் உறையும் தன்மை அதிகம். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தபோது, தினமும், 'எனோக்ஸாபாரின் சோடியம்' ஊசி போட, டாக்டர்கள் அறிவுறுத்தினர்.குடும்ப சூழலால் பொள்ளாச்சியில் இருந்து, 45 கி.மீ., பயணித்து கோவை அரசு மருத்துவமனையில் ஊசி போடுவது சிரமம் என கார்த்திகா தெரிவித்தார். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஊசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டது.அங்கு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், கோவை அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். கார்த்திகாவுக்கு இரட்டை குழந்தை பிறக்கவுள்ளது. கோவையில் நான்கு மாதம் தங்கி சிகிச்சை பெற மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தி, சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளன.பொள்ளாச்சி அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் ராஜா கூறுகையில், ''கர்ப்பிணிக்கு நரம்பு தளர்ச்சிக்கான, 'எனோக்ஸாபாரின் சோடியம்' ஊசியே போடப்பட்டது. அதிக ரத்த அழுத்தம் இருப்பதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கலாம். சளி இருந்ததால், 'வீசிங்' ஏற்பட்டது. உயர் ஆபத்து நோயாளி என்பதால், கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை