எந்த பள்ளியுடன் மோதல்: 'ஆன்-லைனில்' பிக்சர்ஸ் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எந்த பள்ளியுடன் மோதல்: 'ஆன்-லைனில்' பிக்சர்ஸ்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மேட்டுப்பாளையம்:குறுமைய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் அணிகளுக்கு, 'ஆன்-லைன்' முறையில், 'பிக்சர்ஸ்' கூட்டம், காரமடையில் நேற்று நடந்தது.
கோவை கல்வி மாவட்டத்தில், கோவை 'ஏ', 'பி', கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, சூலுார், மேட்டுப்பாளையம் ஆகிய எட்டு குறுமையங்கள் உள்ளன. இதில், 2018-19ம் ஆண்டுக்கான பள்ளி மாணவ, மாணவியருக்கான குழு விளையாட்டு போட்டிக்கான, 'பிக்சர்ஸ்' தயாரிக்கும் கூட்டம், காரமடை எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது; தாளாளர் பழனிசாமி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சசிகலா வரவேற்றார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அனந்தலட்சுமி, குறுமைய அளவில் நடக்கும் குழு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் அணிகள், 'ஆன்-லைன்' முறையில், 'பிக்சர்ஸ்' தயாரிப்பது குறித்து விளக்கினார்.
இதில், 300க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றனர். 11, 14, 17, 19 வயதுக்கு உட்பட்டவர்கள் என, நான்கு பிரிவாக போட்டிகள் நடைபெற உள்ளன.உடற்கல்வி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து, எந்தெந்த அணிகள் மோதுவது என, 'பிக்சர்ஸ்' தயாரித்து வந்தனர். இந்தாண்டு முதல் குழு விளையாட்டில் பங்கேற்கும் அனைத்து பள்ளிகளும், 'ஆன்-லைனில்' பதிவு செய்துள்ளன. அதன் அடிப்படையில், 'பிக்சர்ஸ்' தயாரிக்கப்பட்டது.உடற்கல்வி ஆசிரியர்கள் கூறுகையில், 'பிக்சர்ஸ் போடுவது பெரும் பிரச்னையாக இருக்கும். தற்போது, 'ஆன்-லைன்' முறையில் கம்ப்யூட்டரில் மிக எளிதில் போடப்பட்டுள்ளது. வேலை வெகுவாக குறைந்துள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை