பள்ளியில் அறிவியல் கண்காட்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஊட்டி:ஊட்டி கிரசன்ட் பள்ளியில், இரண்டு நாள் அறிவியல் கண்காட்சி துவங்கியது.அதில், எஸ்.பி., சண்முகபிரியா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கண்காட்சியை துவக்கி வைத்து பேசுகையில், ''இன்றைய அறிவியல் நாளைய தொழில் நுட்பம்; இளம் விஞ்ஞானிகளுக்கு அது மிகப்பெரிய உயரத்தை அடைய உதவுகிறது. அறிவியல் கண்காட்சி, வெவ்வேறு துறைகளில் உள்ள திறமைகளை மாணவர்கள் மூலம் வெளி கொண்டு வர வழிவகை செய்கிறது,'' என்றார்.
இதில், முதல் வகுப்பு முதல், 11ம் வகுப்பு மாணவ, மாணவியர், 'சுற்றுப்புற சூழல், நீர், மின்சாரம், காந்தவியல், சூரிய குடும்பம், போக்குவரத்து, தகவல் தொடர்பு, உடல் நலம்' போன்றவற்றின் மாதிரி வடிவங்களை கண்காட்சியில் வைத்திருந்தனர். ஒவ்வொரு வடிவமும், அவர்களின் திறனை வெளிப்படுத்துவதாக இருந்தது.
பள்ளி தாளாளர் உமர் பரூக் கூறுகையில், ''இதில் தேர்வு பெறும் முதல் மூன்று படைப்புகள், மாநில மற்றும் தேசிய அறிவியல் போட்டிக்கு விரைவில் அனுப்பப்படும்,'' என்றார்.ஏற்பாடுகளை, அறிவியல் கண்காட்சி குழு தலைவர் பீனா ராஜேஷ், ஆசிரியைகள் மேகலா, ஸ்ரீவாணி, சாலி, ஜேக்லின், மேனகா, வினோத் ஆகியோர் மாணவ, மாணவியர் குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை