'கண்ட இடங்களில்' குப்பை தவிர்க்க மகளிருக்கு அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'கண்ட இடங்களில்' குப்பை தவிர்க்க மகளிருக்கு அறிவுரை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குன்னுார்:குன்னுார் எடப்பள்ளி ஆரக்கொம்பை சமுதாய கூடத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. முகாமுக்கு, எம்.பி., அர்ஜுணன் தலைமை வகித்தார்.
மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசுகையில், ''மாநில அரசின் சார்பில், நீலகிரிக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டுவதற்கு, 2.10 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகை போதுமானதாக இல்லையெனில், முன்னோடி வங்கி மூலம் குறைந்தவட்டியில் கடன் பெற்று பயனடையலாம். துப்புரவு பணியாளர்களிடம் மட்கும், மட்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும். ஆங்காங்கே குப்பை கொட்டுவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, 30 பேருக்கு தலா, 1,000 ரூபாய் முதியோர் உதவி தொகை; ஐந்து பயனாளிகளுக்கு சலவை பெட்டி; 5 பயனாளிகளுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு; 27 பயனாளிகளுக்கு, 12.80 லட்சம் ரூபாய் பயிர்கடன் வழங்கப்பட்டது. இதை தவிர, 40.25 லட்சம் ரூபாய்க்கான காசோலை பல்வேறு கடன்களுக்காக வழங்கப்பட்டது. மொத்தம், 87 பயனாளிகளுக்கு, 53.35 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.முகாமில், மக்களிடம் இருந்து, 120 மனுக்கள் பெறப்பட்டன. நீலகிரி எம்.பி., கோபாலகிருஷ்ணன், குன்னுார் ஆர்.டி.ஓ., பத்ரிநாத், தாசில்தார் கணேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்கிருஷ்ணன் மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X