புகார் பெட்டி - சேலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - சேலம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மழை, வெயிலில் தவிக்கும் மாணவர்கள்: கொளத்தூர் அடுத்த மாங்காடு, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், ஏராளமான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அவர்கள், கொளத்தூர் - கோவிந்தப்பாடி நெடுஞ்சாலைக்கு வந்து, தங்கள் கிராமங்களுக்கு பஸ் ஏறிச் செல்கின்றனர். ஆனால், அங்கு நிழற்கூடம் இல்லை. இதனால், மழை மற்றும் வெயில் காலங்களில் ஒதுங்க இடமின்றி, மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து, அதிகாரிகளிடம் புகாரளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

- கா.கனகராஜ், பாலவாடி.

அரசு அலுவலகத்தில் கழிப்பிடம் அவசியம்: பெத்தநாயக்கன்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு, ஒன்றிய கிராமங்களைச் சேர்ந்த பலர், தினமும் வந்து செல்கின்றனர். அங்கு கழிப்பிட வசதி இல்லாததால், மக்கள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, பெண்கள் மறைவிடங்களை தேடி அலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதனால், அலுவலக வளாகத்தில் கழிப்பிடம் கட்டுவதோடு, இருக்கை வசதியும் ஏற்படுத்தித்தர, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஓ.எம்.சக்திவேல், ஓலப்பாடி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை