மாணவி திருமணம் தடுத்து நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவி திருமணம் தடுத்து நிறுத்தம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆத்தூர்: பள்ளி மாணவிக்கு நடக்கவிருந்த திருமணத்தை, வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்தினர். ஆத்தூர் அருகே, ராமநாயக்கன் பாளையம், மாமரத்துகாடு பகுதியைச் சேர்ந்த, 14 வயதுடைய, 10ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, கடந்த, 11ல், திருமண நிச்சயம் நடந்தது. தலைவாசல் அருகே, வெள்ளையூரைச் சேர்ந்த விவசாயி பரமசிவம், 30; இவருடன், நாளை, மாணவிக்கு திருமணம் செய்ய, ஏற்பாடு நடந்தது. இதுகுறித்து, சிறுமியின் உறவினர்கள் அளித்த தகவல்படி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், சமூக நலத்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறையினர், மாணவி வீட்டுக்கு, நேற்று சென்றனர். அங்கு இருதரப்பு பெற்றோரை அழைத்து பேசினர். அப்போது, 'மாணவிக்கு, 18 வயது பூர்த்தியாகும் வரை திருமணம் செய்யமாட்டோம்' என, இருவீட்டினரும் உறுதியளித்ததால், திருமணம் நிறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை