விமான நிலைய விரிவாக்கம்: 532 பேருக்கு பட்டா தயார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விமான நிலைய விரிவாக்கம்: 532 பேருக்கு பட்டா தயார்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: விமான நிலைய விரிவாக்கத்துக்கு இடம் கொடுத்தவர்களில், 532 பேருக்கு, பட்டா வழங்குவதற்கான நிலம் தயாராக உள்ளது. சேலம், காமலாபுரத்திலுள்ள, விமான நிலைய விரிவாக்கத்துக்கு, 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. அதற்கான நில ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட, 581 பேரில், 49 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 532 பேருக்கு, பட்டா வழங்க, நில ஆர்ஜிதம் செய்து, தயாராக வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கஞ்சநாயக்கன்பட்டியில், 2.5 ஏக்கர், சிக்கனம்பட்டியில், 1.17 ?ஹக்டேர், தும்பிப்பாடியில் ஐந்து ?ஹக்டேர் நிலம் சர்வே செய்து, தயாராகவுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டி.ஆர்.ஓ., சுகுமார் கூறுகையில், ''விமான நிலையத்துக்கு இடம் கொடுத்தவர்களுக்கு, விரைவில், பட்டா வழங்கப்படும். தேவையான உதவிகள் பெற, நேரடியாக விண்ணப்பிக்கலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை