அதிகாரிகள் சிறைபிடிப்பு விவகாரம்: சேகோ ஆலை உரிமம் தற்காலிக ரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் சிறைபிடிப்பு விவகாரம்: சேகோ ஆலை உரிமம் தற்காலிக ரத்து

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: அதிகாரிகள் சிறைபிடிப்பு விவகாரத்தில், சேகோ ஆலை உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆத்தூர், வடசென்னிமலையிலுள்ள, 'அருள்முருகன் ஸ்டார்ச் இன்டஸ்ட்ரீஸ்' எனும் ஜவ்வரிசி ஆலை உள்ளது. அங்கு, கடந்த, 4 இரவு, ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் உள்ளிட்ட அதிகாரிகளை, ஆலை உரிமையாளர்கள் சிறை பிடித்தனர். இச்சம்பவத்தில், 40க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த, 6ல், ஆலை உரிமையாளர் நடராஜனுக்கு, 48, விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், ஜவ்வரிசி உற்பத்தியில், கலப்படம் செய்யவில்லை என்பதற்கான எழுத்துப்பூர்வ ஆதாரங்களை தாக்கல் செய்வதோடு, 12ல் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், உரிமையாளர் ஆஜராகாமல், 12 நாள் அவகாசம் கோரியிருந்தார். அதன் எதிரொலியாக, அரசுப்பணியை செய்ய விடாமல் தடுத்து சிறை வைத்தது சட்ட விரோதம். குறிப்பாக, தகுந்த ஆவணங்களை தாக்கல் செய்யாததால், உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாரியப்பன் கூறுகையில், ''விசாரணைக்கு வராததால், உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும், 27ல், மறுவிசாரணைக்கு பின், உரிமம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். மீறி இயக்கினால், சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை பாயும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X