கல்வி உதவித்தொகை தேர்வு: ரூ.1 லட்சம் வெல்ல வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி உதவித்தொகை தேர்வு: ரூ.1 லட்சம் வெல்ல வாய்ப்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: சேலம், 'ஆகாஷ் எக்ஸல் நெம்பர் 1 நீட் பயிற்சி அகாடமி' சார்பில், கல்வி உதவித்தொகை தேர்வு, நாளை காலை, 10:00 முதல், 12:00 மணி வரை, சேலம், நான்கு ரோடு, சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் நடக்கவுள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு நடக்கும் தேர்வில், வெற்றி பெறுவோருக்கு, ஒரு லட்சம் ரூபாய், கல்வி உதவித் தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும். கேள்விகள், பிளஸ் 1 மாணவர்களுக்கு, 10ம் வகுப்பு கணிதம், அறிவியல்; பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிளஸ் 1 இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களிலிருந்து, 100 கேள்விகள் கேட்கப்படும். அந்த அகாடமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற, சிறுமலர் பள்ளியில், கணினியுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த நீட் தேர்வில், அகாடமி மாணவி கீர்த்தனா, 532 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த வாரம் நடந்த நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, நாளை பயிற்சி நடக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை