முறையற்ற குடிநீர் இணைப்பு துண்டிக்கும் பணி துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முறையற்ற குடிநீர் இணைப்பு துண்டிக்கும் பணி துவக்கம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மகுடஞ்சாவடி: முறையற்ற குடிநீர் இணைப்பு துண்டிக்கும் பணி தொடங்கியது. காவிரி குழாய்களில், பலர் முறைகேடு இணைப்பு பெற்று, மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதாக புகார் எழுந்தது. இதனால், அந்தந்த பகுதிகளில், தாசில்தார் தலைமையில் பறக்கும் படை அமைத்து, முறையற்ற இணைப்பு துண்டிக்கும் பணி நடக்கிறது. அதன்படி, மகுடஞ்சாவடியில், 14, கூடலூரில் ஏழு, அ.புதூரில், 28, அ.தாழையூரில், 2, வைகுந்தத்தில், 11, காளிகவுண்டம்பாளையத்தில் மூன்று என, 65 பேர், முறையற்ற குடிநீர் இணைப்பு பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், நேற்று, மகுடஞ்சாவடி, ஜெயபுரி வீதியிலிருந்து, அந்த இணைப்பு துண்டிக்கும் பணியில், பறக்கும் படையினர் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை