தீவிர கண்டுபிடிப்பு முகாம்: 3 பேருக்கு தொழுநோய்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தீவிர கண்டுபிடிப்பு முகாம்: 3 பேருக்கு தொழுநோய்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஏற்காடு: தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தில், ஏற்காட்டில், கடந்த, 2 முதல், நேற்று வரை, தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு சிறப்பு முகாம், பல்வேறு பள்ளிகளில் நடந்தது. மேற்பார்வையாளர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். மேலும், அங்கன்வாடி பணியாளர்கள் மூலம், அனைத்து கிராமங்களில், ஆய்வு நடந்தது. ஆய்வு மற்றும் முகாம்களில், ஏற்காட்டைச் சேர்ந்த, 50 வயது ஆண் ஒருவருக்கு பரவக்கூடிய தொழுநோய், இரு மாணவர்களுக்கு, பரவா தொழுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு ஆலோசனை, சிகிச்சையளிக்கப்படுகிறது. இரண்டாம் கட்ட முகாம், அடுத்த மாதம், 2 முதல், 20 வரை நடக்கவுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை