'பட்டாதாரர் பெயருக்கே இழப்பீடு தொகை': 8 வழிச்சாலைக்கு நிலம் தருவோருக்கு தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'பட்டாதாரர் பெயருக்கே இழப்பீடு தொகை': 8 வழிச்சாலைக்கு நிலம் தருவோருக்கு தகவல்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சேலம்: ''எட்டு வழிச்சாலைக்கு நிலம் கொடுக்கும் விவசாயிகளில், பட்டாதாரர் பெயரின் வங்கி கணக்கில் மட்டுமே, இழப்பீடு தொகை செலுத்தப்படும். அதற்கேற்ப, ஆவணங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என, டி.ஆர்.ஓ., சுகுமார் தெரிவித்துள்ளார்.
சேலம், தெற்கு தாலுகா அலுவலகத்தில், எட்டு வழிச்சாலை தொடர்பாக, விவசாயிகளிடம், நேற்று, நேர் விசாரணை நடந்தது. அதில், பாரப்பட்டி, சித்தனேரி, உத்தமசோழபுரம், அக்ரஹார பூலாவரி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, நாழிக்கல்பட்டி, நிலவாரப்பட்டி விவசாயிகள், 237 பேருக்கு, அழைப்பாணை அனுப்பப்பட்டது. அதில், 126 பேர் பங்கேற்றனர். டி.ஆர்.ஓ., சுகுமார் தலைமையில், அவர்களை தனித்தனியே அழைத்து, நில எடுப்பு தாசில்தார்கள் விசாரித்து, நில ஆவணங்களை சரி பார்த்தனர். பின், விவசாயிகளின் கருத்துகளை கேட்டறிந்தனர். அப்போது, அதிக இழப்பீடு தேவை, வேலை வாய்ப்பில் முன்னுரிமை, மாற்று இடம், பசுமை வீடு என, அவரவர் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். நிலவாரப்பட்டி விவசாயிகள், 26 பேர், விசாரணைக்கு ஆஜராகாமல், வெளியே முகாமிட்டிருந்தனர். பின், அதிகாரிகளின் வலுக்கட்டாயத்தின்பேரில் ஆஜராகி, 'எட்டுவழிச்சாலை திட்டம் வேண்டாம். நிலத்தை தரமாட்டோம். யார் வந்து கேட்டாலும் இதே பதில் தான்' எனக்கூறி, வாக்குமூலமாக எழுதிகொடுத்துவிட்டு, வெளியேறிவிட்டனர்.

டி.ஆர்.ஓ., சுகுமார் கூறியதாவது: எட்டு வழிச்சாலைக்கு நிலம் கொடுக்கும் விவசாயிகளில், பட்டாதாரர் பெயரின் வங்கி கணக்கில் மட்டுமே இழப்பீடு தொகை செலுத்த முடியும். கூட்டுப்பட்டாவாக இருந்தால், அதை தனிப்பட்டாவாக மாற்றி, அனைத்து ஆவணங்களை தயாராக வைக்க வேண்டும். அதற்கான உதவிகள், உடனடியாக பெறலாம். முதல் கட்டமாக, நேர் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. அடுத்து, நிலம் கொடுக்கும் விவசாயிகளின் பெயர், நிலம், வீடு உள்ளிட்டவைகளின் அளவு, சர்வே எண் போன்ற விபரங்கள், துல்லியமாக, தெளிவாக, அரசிதழில் வெளியிடப்படும். அதன் அடிப்படையில், ஒவ்வொரு கிராம விவசாயிகளையும் தனித்தனியே அழைத்து, நிறைவாக விசாரித்து, இழப்பீடு தொகை முடிவு செய்யப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை