ஜூலை 15ல் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுவதில் குழப்பம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜூலை 15ல் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுவதில் குழப்பம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுவது குறித்து, தெளிவான அறிவிப்பு இல்லாததால், மாணவர்கள், ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. காமராஜர் பிறந்தநாளான, ஜூலை, 15, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது. அன்று, காமராஜர் குறித்த பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தி, பள்ளி மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து, விருது வழங்க, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நாளை(ஜூலை, 15) ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால், பள்ளி திறக்கப்படுவது குறித்து, குழப்பம் நிலவுகிறது. பல மாவட்டங்களில், இன்று கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், நேற்று மாலை, பள்ளி முடியும் வரை, சேலம் மாவட்டத்தில் எந்த அறிவிப்பும் இல்லாததால், சனி, ஞாயிறு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை