கதவை உடைத்து 3.5 பவுன் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளிலும் முயற்சி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கதவை உடைத்து 3.5 பவுன் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளிலும் முயற்சி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஓமலூர்: வீட்டின் கதவை உடைத்து, 3.5 பவுன் நகைகளை கொள்ளையடித்த கும்பல், அடுத்தடுத்து வீடுகளிலும் கொள்ளையடிக்க முயன்றனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே, பாகல்பட்டி, மேட்டுத்தெருவில் வசிப்பவர் சுகவனேஸ்வரர், 46; லாரி டிரைவர். இவரது மனைவி பரமேஸ்வரி, 38. இவர்களுக்கு, ஒரு மகன், மகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, வீட்டை பூட்டிவிட்டு, மாடியில் தூங்கினர். காலை எழுந்து, சுகவனேஸ்வரர் வந்தபோது, கதவு உடைக்கப்பட்டு, வீட்டுக்குள் இருந்த இரும்பு பெட்டிகள் வெளியே கிடந்தன. அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவிலிருந்த மோதிரம், தோடு என, 3.5 பவுன் நகைகள் கொள்ளைபோனது தெரிந்தது. அருகிலுள்ள வீட்டில், தூங்கிக்கொண்டிருந்த பெண் அணிந்திருந்த சங்கிலியை பறிக்க முயன்ற போது, அவர் கூச்சலிட்டதால், மர்ம கும்பல் தப்பியுள்ளனர். அதேபோல், மற்றொரு வீட்டில் கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது. ஓமலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X