மண் கடத்தல்: 2 வாகனங்கள் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மண் கடத்தல்: 2 வாகனங்கள் பறிமுதல்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தலைவாசல்: ஏரியில், கிராவல் மண் கடத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைவாசல், வீரகனூர் ஏரியில், அனுமதியின்றி மண் கடத்துவதாக, வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்றிரவு, 7:00 மணிக்கு, வீரகனூர் வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அனுமதியின்றி, கிராவல் மண் கடத்துவது தெரிந்தது. இதையடுத்து, கடத்தலுக்கு பயன்படுத்திய, பொக்லைன், டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், வீரகனூரைச் சேர்ந்த, டிரைவர் கணேசன், 42, என, தெரிந்தது. அவரிடம், வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை